மாகாண சபைகள் நாட்டுக்கு தேவையா இல்லையா என்பது ஆராயப்படும்! அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது மாகாண சபைகள் நாட்டுக்கு தேவையா இல்லையா என்பது குறித்து ஆராயப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் இன்றி இரண்டு ஆண்டுகள் நாட்டின் நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல்களுக்கு அஞ்சிய காரணத்தினால் கடந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை.

இரண்டு ஆண்டுகள் மாகாண சபைகள் இன்றி நாட்டை நிர்வாகம் செய்ய முடியும் என்றால், அவற்றின் அடிப்படை தேவை என்ன என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.