முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர் பதவியை வழங்கும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

மொஹான் பீரிஸ் இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசராக பதவி வகித்தார்.

2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அவர் அந்த பதவியில் இருந்து வந்தார்.

இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சட்டமா அதிபராகவும் பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.