20வது திருத்தச் சட்டத்தை ஆராய்ந்த குழு பிரதமரின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இன்று அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவின் தலைவராக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் செயற்பட்டு வந்தார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஆராய்ந்து புதிய யோசனைகளுடன் திருத்தங்களை செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த குழுவை நியமித்திருந்தார்.

20வது திருத்தச் சட்டத்தில் புதிதாக உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர்.