ஐ.தே.கட்சியை மீண்டும் உரிய இடத்திற்கு கொண்டு வருவது மிகப் பெரிய பணி: ருவான் விஜேவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி என்பது நாட்டுக்கு சேவை செய்த கட்சி எனவும் அனைவரையும் இணைந்துக்கொண்டு கட்சியை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த கட்சியின் புதிய பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கங்காராம விகாரையில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த பெரிய கட்சியை மீண்டும் உரிய இடத்திற்கு கொண்டு வர பெரிய பணியுள்ளது. அர்ப்பணிப்புகளை செய்ய தயாராக இருக்கின்றேன். எதிர்காலத்தில் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். கட்சியினர் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டியுள்ளது.

அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை மேலும் வலுப்படுத்தவே எண்ணியுள்ளேன். கட்சியை முன்நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அவசியம். கட்சிக்கு புதிய தோற்றம் தேவை என்ற இடத்தில் நான் இருக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது நாட்டுக்கு பெரிய சேவைகளை செய்த மிகப் பெரிய தலைவர்கள் இருந்த கட்சி. கட்சியில் உள்ள ஏனைய தலைவர்களை இணைத்துக்கொண்டு கட்சியை வலுப்படுத்த எண்ணியுள்ளேன்.

அதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் சர்வாதிகாரி உருவாகுவார். இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். அரசாங்கத்திற்குள் 20வது திருத்திச் சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

20வது திருத்தச் சட்டம் நாட்டுக்கு கெடுதியானது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.