பாதுகாப்புச் சபைக்கு மறைக்கப்பட்ட ஐ.எஸ் தொடர்பான தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையை சேர்ந்த 38 முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக இஸ்ரேல் புலனாய்வு சேவை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தும், கடந்த அரசாங்கம் அதனை பாதுகாப்புச் சபைக்கு தெரிவிக்காது மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்த தகவல் இலங்கை புலனாய்வு சேவைகளுக்கு கிடைத்திருந்தது.

எனினும் கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர், முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் மற்றும் முஸ்லிம் பேரவையின் தலைவர் ஆகியோர் இந்த தகவலை மறைத்துள்ளனர்.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த ஆயிரம் பேர் இருப்பதாக புலனாய்வுப் பிரிவுகள் கண்டறிந்த நிலையில், அரசியல்வாதிகளால் அந்த தகவல்களை பாதுகாப்புச் சபைக்கு சமர்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.