தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க தயார்: கருணா அம்மான்

Report Print Steephen Steephen in அரசியல்

முஸ்லிம் மக்கள் தனது எதிரிகள் அல்ல எனவும் தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் என்ற விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை கல்முனையில் உள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சிளும் இணைந்து செயற்பட வேண்டும்.

இந்த ஐக்கியத்தின் மூலம் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சர் ஒருவரை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு உதவ வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். இதனை புரிந்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை முன்னேற்ற விரைவில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்காக வெளிநாடுகளில் உள்ள எமது உறவினர்களிடம் உதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளோம்.

இதன் போது சுயத் தொழில் துறையை முன்னேற்றுவது குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும். எமது பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கிளல் வாழும் மக்ளுக்கு அரசியல் அறிவு கிடையாது.

மதுபானம், பணம் ஆகியவற்றுக்காக வாக்களிப்போர் மக்கள் மத்தியில் உள்ளனர். நாம் மக்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஒத்துழைப்பை வழங்குவார் என நம்புகிறோம். அனைத்து கோரிக்கைகளையும் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முன்வைக்க உள்ளதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.