தனியார் முகவர் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப முடியாது: நிமல் சிறிபால

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்காலத்தில் அரசாங்கம் மாத்திரமே இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அரசும் இலங்கை அரசும் செய்துக்கொண்டுள்ள ராஜதந்திர உடன்படிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் நாடுக்கு வீட்டுப் பணிகள் மற்றும் கமத் தொழில் துறைக்கான தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை தனியார் முகவர் நிலையங்கள் மேற்கொண்டு வந்தன.

இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படும் இலங்கையர்களிடம் முகவர் நிலையங்கள் அதிகளவில் பணத்தை அறவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேல் அரசாங்கம் இலங்கையில் உள்ள முகவர்கள் மூலம் தொழிலாளர்களை வரவழைப்பதை நிறுத்தியது.

இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உடன்படிக்கை காரணமாக தனியார் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்க சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.