மாகாண சபைகள் முறையை ரத்துச்செய்யவேண்டும்! தீர்மானம் நிறைவேற்றம்

Report Print Ajith Ajith in அரசியல்

மாகாணசபைகள் முறையை ரத்துச்செய்யவேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை களுத்துறை - வலல்லாவிட்ட பிரதேசசபை நிறைவேற்றியுள்ளது.

இதற்கான யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான நாலக தரங்க சமரவிக்ரம இன்று இடம்பெற்ற மாதாந்தக்கூட்டத்தில் முன்மொழிந்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ரோஹித்த குமார அத்துகோரள அதனை வழிமொழிந்தார். இதன்பின்னர் வாதவிவாதங்கள் இடம்பெற்று பிரதேசசபையின் 21 உறுப்பினர்கள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான சமந்த அழகப்பெரும மாத்திரம் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.