இணக்க அரசியல்மூலம் தமிழர்களுக்கு நன்மை? ஈபிடிபி அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

இணக்க அரசியல் மூலம் இயலுமானவரை எமது மக்களுக்காக எதனைப் பெறமுடியுமோ அதனை பெறுவதுதான் தற்போது உகந்த வழி என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் முக்கியஸ்தரான சின்னத்துரை தவராசா இதனை தெரிவித்தார். ஐபிசி தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

மக்கள் எதிர்கொள்ளும் காணி விடுவிப்பு, காணாமற்போனோர் பிரச்சினை மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல் போன்ற விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அரசிடம் பேச்சு நடத்தி வருகின்றோம் என கூறியுள்ளார்.