20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியிடப்பட மாட்டாது?

Report Print Steephen Steephen in அரசியல்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமல் இருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட வரைவு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவரைவு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளை, 20ஆவது திருத்தச் சட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்களாக முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவை ஆராய நியமிக்கப்பட்ட குழு நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தனது அறிக்கையை கையளித்தது.

அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்த இந்த குழுவின் தலைவராக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் செயற்பட்டார்.

மக்கள் மற்றும் தேசிய அமைப்புகள் முன்வைத்த யோசனைகளை குழு ஆராய்ந்து திருத்தங்களில் உள்ளடக்கியுள்ளது.

குழுவின் அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.