ஐ.தே.கவின் தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்ற நவீன் திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நவீன் திஸாநாயக்க கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் உட்பட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆதரவாளர்கள் சிலருடன் நேற்று சிறிகொத்தவிற்கு சென்ற நவீன் திஸாநாயக்க தனது அலுவலகத்தில் இருந்த தனது ஆவணங்கள் உட்பட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

ருவான் விஜேவர்தான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் செல்லும் முன்னர் நவீன் திஸாநாயக்க, தனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார்.

நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை எதிர்பார்த்திருந்ததுடன் அதனை பல முறை பகிரங்கமாக கூறியிருந்தார்.