19ஆவது திருத்தச் சட்டத்திற்கு பல தந்தைகள்! 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்படியான தந்தைகள் இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழர்கள், முஸ்லிம் அடிப்படைவாத தந்தைகள் இருந்தாலும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்படியான தந்தைகள் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டம் சட்ட வரைவு திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட வரைவு எனவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரவே மக்கள் ஆணை வழங்கினார்.

அந்த ஆணைக்கு அமைய புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காக அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

இந்த திருத்தச் சட்டத்தை துரிதமாக நிறைவேற்றி நாட்டுக்கு உகந்த அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கம்.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் இல்லாத பூச்சாண்டியை உருவகித்து காட்ட முயற்சித்து வருகின்றனர் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.