78 அரசியலமைப்புச் சட்டம் ஜே.ஆருக்கு பொருந்தும்! ராஜபக்சவினருக்கு பொருந்தாது

Report Print Steephen Steephen in அரசியல்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமைகள் உத்தேச 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயற்பட்டு வருகிறார்.

பாதுகாப்பு அமைச்சை அதன் செயலாளர் ஊடாக ஜனாதிபதி நிர்வகித்து வருகிறார். இது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.

ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது. 20ஆவது திருத்தச் சட்டத்தின் நோக்கம் மீண்டும் 78ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு செல்வது எனக் கூறினாலும் தற்போது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவாக இருந்தால், அதனை நோக்கி மீண்டும் செல்வதில் பிரச்சினையில்லை.

ராஜபக்சவினர் நாட்டை ஆட்சி செய்யும் போது 78ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மீண்டும் செல்வதானது பாரதூரமான சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக அமையும் எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.