20 மீளாய்வுக் குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கரு வலியுறுத்து

Report Print Rakesh in அரசியல்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை. எனவே, அது குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்மொழியப்பட்ட வெள்ளைக் காகிதமாக உள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசு அவசரப்படுவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை.

நாடொன்று சமத்துவம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிப் பயணிப்பதை உறுதி செய்வதற்கு ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகவும் அவசியமானவையாகும்.

20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் ஆராய்வதற்கு அரசால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நியாயமான சமூகத்துக்கான தேசிய இயக்கம் பெரிதும் வரவேற்கின்றது. இதன்போது அரசுக்கு வாக்களித்தவர்களின் கருத்துக்களை மாத்திரமன்றி அரசுக்கு வாக்களிக்காதவர்களின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.