மருத்துவ சங்கத்தின் நடவடிக்கையை ஆராய ஐவர் குழுவை நியமித்தது சுகாதார அமைச்சு

Report Print Rakesh in அரசியல்

இலங்கை மருத்துவ சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த பெரேரா, ராகமை வைத்திய பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிரசாந்த விஜேசிங்க, விசேட வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர, விசேட வைத்திய நிபுணர் மைத்திரி சந்திரரத்ன மற்றும் விசேட வைத்திய நிபுணர் தர்சண சிறிசேன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மருத்துவர் சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால், இது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.