20வது திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை: அமரவீர

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட 20வது திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20வது திருத்த முன்மொழிவுகள் அண்மையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன.

எனினும் ஆளும் கட்சிக்குள்ளே அது தொடர்பான தெளிவின்மை மற்றும் விமர்சனங்கள் எழுந்தமையை அடுத்து பிரதமரால் முன்மொழிவுகளை ஆராய அமைச்சர் ஜி.எல் பீரிஸின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் அறிக்கை நேற்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று அமைச்சரவையில் அது சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அது சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார். எனினும் காரணம் எதனையும் அவர் கூறவில்லை.