தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என நீதிமன்றத்தில் முழக்கமிட்ட சிவாஜிலிங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய இணைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டித்துவிட்டு வரும்வேளையில் கோப்பாய் பொலிஸார் என்னை கைது செய்தனர் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை மணித்தியாலம் பொலிஸாரின் காவலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நாங்கள் வெளியில் வந்தோம்.

கடுமையாக எச்சரித்து விடுதலை செய்வதாக நீதிபதி எனக்கு அறிவித்திருக்கின்றார்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர், பயங்கரவாதிகளை விட நான் மோசமானவன் என்றும், என்னைத் திருத்தவே முடியாது என்றும் சிறையில் அடைக்கவேண்டும் எனவும் கூறியிருக்கின்றனர்.

குறிப்பாக நினைவேந்தலின் போது பதாகைகளில் எழுதியிருந்த வாசகங்களே இவர்களின் கோபத்திற்கு காரணம்.

இன்று நீதிமன்றத்திலும்கூட தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனக் கூறினேன். இதனை நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடென கூறினார்கள் எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முயற்சித்த போது கைது செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றை காட்சிப்படுத்தி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் சிவாஜிலிங்கமும் மற்றுமொரு நபரும் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.