ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தனவிற்கு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இவ்வாறு தனது வாழ்த்தினை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ருவான் விஜேவர்தன இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.