முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த விசேட சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் அமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.