சஜித்துடன் பேசினேன்.... ருவான் விஜேவர்தன கூறிய தகவல்

Report Print Murali Murali in அரசியல்
170Shares

ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் நட்பை வளர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கேள்வி - சஜித்திடமிருந்து உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரவில்லையா?

பதில் - வந்தது.... வந்தது... நேற்று அவருடன் பேசினேன். நான் சஜித் பிரேமதாசவுடன் பேசினேன், அத்துடன், ரஞ்சித் மத்தும பண்டாரவுடனும் பேசினேன்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவராக அண்மையில் ருவான் விஜேவர்தன இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், 2021ம் ஆணடு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.