உரிய சந்தர்ப்பத்தில் அரசுக்கு மு.கா. ஆதரவளிக்கக்கூடும் - கட்சியின் பிரதித் தலைவர் நஸீர் எம்.பி. தகவல்

Report Print Rakesh in அரசியல்

பொருத்தமான சூழ்நிலைகளின்போது அரசுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்டமைப்பின் வெற்றிக்காக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசு கோருவது வழமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அரசு பெருமளவு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. மக்களின் நன்மைக்காக நாங்கள் இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்" - என்றார்.