ராஜபக்ச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..

Report Print Jeslin Jeslin in அரசியல்
190Shares

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த, இந்தியப் பிரதமரிடம் நலன் விசாரித்ததுடன், தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அவருக்குத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்தவிற்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி, பிரதமரின் குடும்பத்தில் புதிய வாரிசாக பிறந்துள்ள நாமல் ராஜபக்சவின் மகனுக்கும் தனது வாழ்த்துக்களையும் மகிழ்வையும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இரு தலைவர்களும் பரஸ்பரம், நாட்டு நடப்பு மற்றும் கொரோனாவின் தற்போதைய நிலைவரம் குறித்தும் தமது உரையாடலில் பகிர்ந்து கொண்டனர்.