சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினருடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 114ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் வைபவம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஏதாவது கிடைத்ததா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தொலைபேசி அழைப்பு வந்தது. நான் நேற்று சஜித் பிரேமதாசவுடனும் பேசினேன்.
ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள ஆகியோருடனும் பேசினேன். ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் எங்களது நண்பர்கள்.
நான் பலருடன் உரையாடினேன். உண்மையில் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து செயற்பட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.