அரசாங்கத்திற்குள் எதிர்ப்பு வெடித்து சிதறியுள்ளது:சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்
296Shares

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு தற்போது வெடித்து சிதறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்த சம்பிக்க ரணவக்க, செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் காணப்பட்ட எதிர்ப்பு நிலைமை எந்த நேரத்திலாவது வெடிக்கும் நிலை காணப்பட்டதுடன், இந்தளவுக்கு விரைவாக அது நடக்கும் என நான் எண்ணவில்லை.

எதிர்காலத்தில் ஏற்படபோகும் பொருளாதார நெருக்கடியானது அரசாங்கத்தில் மேலும் அரசியல் நெருக்கடியாக உருவெடுக்கும்.

தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அரசியல் ரீதியான அச்சாறு. அரசாங்கத்தில் இருப்பவர்களின் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவின் ஆதரவாளர்கள் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.