பொருட்களின் விலையேற்றத்திற்கு குறுகிய கால நிவாரணத்தை வழங்க முடியாது: அமைச்சர் பந்துல குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்
46Shares

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு எவ்வித குறுகிய கால நிவாரணங்களையும் வழங்க முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழு உலகத்திற்கும் தற்போதுள்ள பெரிய பிரச்சினை கொரோனா வைரஸ் தொற்று நோய். மக்கள் மரணித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் எமது நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அனைத்தையும் அதிகளவில் உற்பத்தி செய்தால், பொருட்களின் விலைகள் குறையும். பொருட்களின் விலை தொடர்பான பிரச்சினைக்கு இது தீர்வு.

இதன் காரணமாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஜனாதிபதி நிறுத்தியுள்ளார்.

நாட்டின் கமத்தொழிலாளர்களை பாதுகாத்து உற்பத்திகளை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திற்கு பிரச்சினையாக இருந்தாலும் நீண்ட காலத்திற்கு மிகவும் நன்மையாக அமையும் என்பதுடன் ஸ்திரமான சந்தையை நோக்கி செல்ல முடியும்.

பொருட்களின் விலையேற்றத்திற்கு மக்களுக்கு குறுகிய கால நிவாரணத்தை வழங்க முடியாது. பொய்யான தீர்வுகள் இல்லை. வர்த்தக அமைச்சரான நானும் இந்த உலகில் உள்ள ஒரு உயிரினம்.

முழு உலகமும், துறைமுகங்கள், விமான நிலையங்களை மூடும் போது இலங்கையின் வர்த்தக அமைச்சரான எனக்கு அந்நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை திறக்குமாறு கூற முடியாது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.