ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாராக ஒருவரை நியமிக்குமாறு கட்சியின் செயற்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அனைத்து பதவிகளிலும் மறுசீரமைப்பு செய்ய உள்ளதால், கட்சியின் பொதுச் செயலாளராக புதியவர் ஒருவரை நியமிக்குமாறு கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 114வது பிறந்த தின வைபவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.