20ஆவது திருத்தம் தொடர்பாக அமைச்சரவைக்குள் மோதல்! லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்
173Shares

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்த போது அங்கு பெரிய வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கலந்துரையாடல்கள் இன்றி, உருவாக்கியவர் இல்லாது இப்படியான அரசியலமைப்புத் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அமைச்சரவைக்குள் இந்த வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள முடியும் என நான் நம்பவில்லை எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.