திருத்தங்கள் இன்றி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் 20வது திருத்தச் சட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்
63Shares

வர்த்தமானி மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவை மாற்றங்கள் எதுவுமின்றி எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பிரதிச்செயலாளர் நீல் தித்தவெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் அதற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தால், நீதிமன்ற செயற்பாடுகளுக்காக மேலும் மூன்று வார காலம் வழங்கப்படும்.

இதன் பின்னர் இரண்டாம் முறை வாசிப்பு தொடர்பான விவாதத்திற்கு சட்டத் திருத்தத்தை சமர்ப்பிக்க முடியும். திருத்தச் சட்ட வரைவில் திருத்தங்கள் இருக்குமாயின் அதனை குழு நிலை விவாதத்தின் போது உள்ளடக்க முடியும் எனவும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.