20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் முன்னரே பொம்மைகளாக மாறியுள்ள அமைச்சர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் முன்னர் ஜனாதிபதி தனது அதிகாரங்களை பயன்படுத்தி, ஆளும் கட்சியை தரை மட்டமாக ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் அந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், நாடும் கடும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும்.

இந்த திருத்தச் சட்டத்திற்கு முதலில் எதிர்ப்பை வெளியிட்டது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால், அதற்கு ஆதரவளிக்க வேண்டாம் என கோருகின்றோம்.

20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் முன்னரே அமைச்சர்கள் பொம்மைகள் போல் மாறியுள்ளனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.