சபாநாயகர் மஹிந்த யாப்பாவுடன் அமெரிக்கத் தூதுவர் பேச்சு

Report Print Rakesh in அரசியல்
62Shares

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் USAid இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜெப்ரி சனின் மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் இதில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.