ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கின்றார் மைத்திரி

Report Print Rakesh in அரசியல்
107Shares

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என்று கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் மற்றும் பெண்கள் அணியினரை மையப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.