தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது ஆளுங்கட்சி - ஒப்புக்கொண்டார் மனோ

Report Print Rakesh in அரசியல்
213Shares

தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி அழைப்பு விடுத்துள்ளமையை முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அரசியலில் இவ்வாறு பேச்சு நடைபெறுவது இயல்பு.

ஆனாலும், என்னுடன் எவரும் கலந்துரையாடல் நடத்தவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணியில்தான் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அங்கம் வகிக்கின்றது. நாம் ’20’ ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.