மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வேறுபடுத்தி கொடுக்க முடியாது! இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர விடாபிடி

Report Print Murali Murali in அரசியல்
141Shares

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் மக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப வழங்கப்படுமே தவிர ஒருபோதும் வேறுபடுத்திக் கொடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மாகாணசபை முறைமையை இரத்து செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்ட தனிப்பிட்ட கருத்தை அரசியல்வாதிகள் அரசியல் மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாற்றியமைத்து விட்டனர்.

அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போது நான் கடுமையாக எதிர்த்தேன். அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே கருத்துரைக்கின்றேன்

இந்தியாவினால் 13வது திருத்தம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு வரப்படவில்லை.

அரசியல் உள்நோக்கங்களுக்காகவே 13வது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.

அதிகார பரவலாக்கம் மாகாணசபைகள் ஊடாக இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. அதனை ஒருபோதும் ஏற்க முடியாது.

மாகாண சபைகள் ஊடாக மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க அதிகாரங்கள் வழங்கப்படும். மாறாக ஒருபோதும் அதிகாரம் பங்கிடப்படமாட்டாது.

அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும். இவ்விடயத்தில் உறுதியாக உளளோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, 13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு தனியான பிரேரணை ஒன்றை முன்வைப்பேன் எனவும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சு பதவி வகித்தாலும் 13 ஐ இல்லாமல் ஆக்கவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.