மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லம் பிரதமர் மகிந்தவுக்கு பொருத்தமானது

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு - பெஜட் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தை பிரதமருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை முன்வைக்க தயாராகி வருவதாக தெரியவருகின்றது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது மூன்று வீடுகளை ஒன்றாக இணைத்து நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆடம்பர உத்தியோகபூர்வ இல்லத்தை, அவர் ஓய்வுபெற்ற பின்னர், ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தி வருகின்றார்.

இது சம்பந்தமாக நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் முன்வைத்து வருகின்றனர்.

மைத்திரிபால சிறிசேன தற்போது பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லம் முன்னாள் ஜனாதிபதியை விட பிரதமருக்கே பொருத்தமானது எனவும் இவர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தையே பிரதமர் மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வருகின்றார்.