ஐ.தே.கட்சியின் அழிவுக்கு காரணம் ரணில்! நேரடியாக விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித்தலைவரை தெரிவு செய்வதற்காக கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் விஜேமான்ன, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தது ரணில் விக்ரமசிங்க என, விஜேமான்ன, செயற்குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலேயே குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் ரணில் விக்ரமசிங்க இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இப்படியான சம்பவம் நடந்ததை ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன உறுதிப்படுத்தியுள்ளதுடன், கட்சியின் பின்னடைவுக்கு ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல தான் உட்பட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்பது தனது நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.