நாட்டின் தற்போதைய தலைமையின் மீது நம்பிக்கை வைத்து திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டாம்! எல்லே குணவங்ச தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவது பொருத்தமற்றது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் தலைவராக வரப்போவது யார் என்பது தெரியாமல் தற்போதுள்ள தலைவருக்கு பொருத்தமாக அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது உகந்தது அல்ல. நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்புச் சட்டமே உருவாக்கப்பட வேண்டும்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு இணங்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் இவ்வாறு ஒட்டுப் போடுவது தீர்வாக இருக்காது. அது அவசியமற்றது. புதிய அரசியலமைப்புச் சட்டமே தேவை. அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து மிகவும் வருத்தப்படுவதாகவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லே குணவங்ச தேரர் உட்பட முக்கியமான பௌத்த பிக்குகள் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பல செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.