அரசாங்கத்தை கவிழ்ப்போம்!ராஜித சேனாரத்ன

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எந்த வகையிலும் மேலும் ஆறு மாதங்களுக்கு இந்த அரசாங்கம் முன்நோக்கி செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டிடம் ராஜித இதனை குறிப்பிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற வரவேற்பறையில் நசீர் அஹமட்டுடன் உரையாடியுள்ள ராஜித சேனாரத்ன, ஆறு மாதங்களுக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க உள்ளதால், அரசாங்கத்துடன் இணைவது குறித்து எண்ணிக்கூட பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

நசீர் அஹமட் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள் பரவி வருவதன் காரணமாக அவரை தடுத்து நிறுத்துவதற்காக ராஜித சேனாரத்ன இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.