அமைச்சுக்களில் வரவுள்ள மாற்றம்? அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் மற்றும் 28 இராஜாங்க அமைச்சுக்களில் சில மாற்றங்களை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த அமைச்சுக்களின் துறை சார்ந்த நிறுவனங்கள், துறைகள் மற்றும் பெயர்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான துறைகள் ராஜாங்க அமைச்சுக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ராஜாங்க அமைச்சுக்களுக்கு இடையிலான துறைகளிலும் மாற்றம் செய்யப்படுவதுடன் ராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய பெயரை அறிவிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இதனை விட மேலும் சில மாற்றங்களை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.