20ஆவது திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து வருகிறோம்! சரத் வீரசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஆம், அது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். திருத்தச் சட்டம் பற்றி எனக்கு தெரியாது. அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழு அறிக்கை வழங்கியது. நாடு ஒன்றின் ஜனாதிபதி பெரும்பான்மையான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டால், நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல நிறைவேற்று அதிகாரம் தேவை.

19ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் இருந்த நிலைமையை மக்கள் எதிர்க்கவில்லை என்றால், இந்த திருத்தச் சட்டத்தை எதிர்ப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.