ரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டை சுமத்தும் லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் இனவாத அடிப்படையில் அரசியலில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

ரவூப் ஹக்கீம், ஹலீம் மற்றும் வேலுகுமார் ஆகிய சிறுபான்மை இன வேட்பாளர்கள் இருவரை இணைத்து கொண்டு ஒன்றாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இதனடிப்படையில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கான நான்கு நாடாளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் அவர்களுக்கு கிடைத்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும் போது சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த வாக்குகளில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் வாக்குகள் இம்முறை பொதுத் தேர்தலில் கிடைக்கவில்லை.

இந்த வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் சிங்களவர்களின் வாக்குகள் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.