அடுத்த சில தினங்களில் ஆளும் கட்சியுடன் இணைய தயாராகும் எதிர்க்கட்சியை சேர்ந்த மூவர்?

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த சில தினங்களில் ஆளும் கட்சியுடன் இணைய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சியில் இணைந்தால், ஆசனங்கள் எப்படி ஒதுக்கப்படும் என இவர்களில் ஒருவர், நாடாளுமன்ற அதிகாரி ஒருவரிடம் அண்மையில் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது எதிர்க்கட்சி வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது குறித்து தற்போதே எதனையும் கூற முடியாது என அந்த அதிகாரி பதிலளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ குடியிருப்பான மாதிவல வீடமைப்பு தொகுதியில் வீட்டை பெற்றுக் கொள்ளாது சமீட் வீடமைப்புத் தொகுதியில் வீடொன்றை பெற்றுக்கொள்வது சம்பந்தமாகவும் அதிகாரி ஒருவருடன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார் எனவும் தெரியவருகிறது.

இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் உள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது.

இவர்களில் ஒருவர் மாகாணம் ஒன்றில் உயர் பதவியை வகித்தவர் எனவும் தெரியவருகிறது.