20வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ள குழு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, கபீர் ஹாசிம், மனோ கணேசன், எரான் விக்ரமரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், லக்ஷ்மன் கிரியெல்ல, ஹர்ச டி சில்வா, ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டத்தரணிகள் சுரேன் பெர்னாண்டோ, சிரால் லக்திலக்க ஆகியோரும் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே 20வது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.