19ஆம் திருத்தத்தினை முழுவதுமாக நிராகரிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார

Report Print Ajith Ajith in அரசியல்

19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவு அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திலும் தக்க வைக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

19ஆம் திருத்தத்தில் பல நன்மையான அம்சங்கள் இருப்பதால், அதனை முழுவதுமாக நிராகரிக்க முடியாது.

.தகவல் அறியும் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தல், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துதல், ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிடக்கூடிய தவணை எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் 19இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல்களில் இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள் போட்டியிடுவதைத் தடுப்பது போன்ற சில அம்சங்கள் சிறந்த அம்சங்களாக இருக்கின்றன.

எனவே அவை 20வது திருத்தத்திலும் தக்க வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.