நல்லாட்சி முறைகேடுகள் தொடர்பில் 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

Report Print Rakesh in அரசியல்

நல்லாட்சி அரச காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் ஆராய்வதற்காகப் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

குறித்த அரச வங்கிகள் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மற்றும் பொதுமக்களினால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதால் முறைப்பாடுகளை ஏற்கும் இறுதித் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளைப் பரிசீலித்த பின்னர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்பினரை அழைத்து வாக்குமூலம் பெறப்படவுள்ளது.