ஜனாதிபதியின் தவறான முடிவால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி! எதிர்க்கட்சி சாடல்

Report Print Murali Murali in அரசியல்

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், ஜனாதிபதி எடுத்த தவறான முடிவால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மதிப்பு கூட்டப்பட்ட வரி வீதத்தை 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைத்ததன் காரணமாக இவ்வாறு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சரியான நபர்கள் நிவாரணம் பெற்றார்களா? சராசரி வர்க்கம் எதையும் உணர்ந்ததா? இது அரசாங்கம் கடைப்பிடித்த மிக மோசமான ஒரு பொருளாதார உத்தியாகும்.

வாழ்க்கைச் செலவின் சுமையைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும், அதைவிடுத்து காரணம் சொல்ல அரசாங்கத்திற்கு உரிமை இல்லையென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீண் செலவினங்களிலிருந்து விலகி, பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனினும், அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் மூலம் அதிக அதிகாரத்தைப் பெறவே அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.