ராஜபக்ஷ தரப்பிலிருந்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? - சஜித் தரப்பினர் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் மஹிந்த குடும்பத்திற்கு அல்லாமல் கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்திற்கு இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை தொடர்பில் காணப்பட்ட தடையை நீக்கி ஜனாதிபதி வேட்பாளரின் வயது எல்லையை 30 வரை குறைத்தமையானது நாமல் ராஜபக்ஷவுக்காக அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டமானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனை இலக்கு வைத்து மேற்கொண்டிருக்கலாம் எனவும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அவரின் மகனை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது சட்டமூலம் தொடர்பில் பரிந்துரை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குப்பையில் வீசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டிடிற்கு வர முடியவில்லை என்றால் அதனை முன்னோக்கி கொண்டு செல்வது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


you may like this video,