ஐ.மக்கள் சக்தியில் இணையும் ஐ.தே.கட்சியை சேர்ந்த பலர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து இந்த அணி மாறல் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாகாண சபைகளில் அங்கம் வகித்த முன்னாள் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் தேர்தலில் போட்டியிட இவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளன.

சிலர் தமது இந்த தீர்மானம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.