அறிவிப்பாணை இன்றி ஜனாதிபதி ஆணைக்குழுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணியுடன் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வந்துள்ளமை சாட்சியமளிப்பதற்காக அல்ல, மற்ற நபர்கள் வழங்கும் சாட்சியங்களை செவிமடுப்பதற்காகவே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த சில தினங்களாக சாட்சியங்களை வழங்கி வரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக பல தகவல்களை சாட்சியமாக வழங்கி இருந்தார்.

இது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலேயே அறிவிப்பாணை இன்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.