பிரதமரின் அதிகாரத்தை இல்லாமல் ஆக்க எவருக்கும் இடமளிக்க முடியாது - மகிந்தானந்த அளுத்கமகே

Report Print Steephen Steephen in அரசியல்

யாருடைய அதிகாரத்தை இல்லாமல் செய்தாலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அதிகாரத்தை இல்லாமல் ஆக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் பிரதமருக்கு 19வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மரிக்கார் இந்த கேள்வியை எழுப்பி இருந்தார்.

20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று நீதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.