அதாவுல்லாவால் புதிய சர்ச்சை; பாராளுமன்றில் இருந்து அவசரமாக வெளியேற்றம்! வெளியானது காணொளி

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்றது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அதாவுல்லா அணிந்திருப்பது அவரது தேசிய உடை என கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா பக்கம், நாடாளுமன்றத்தின் கெமராக்கள் திருப்பப்படவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இதன் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், அதாவுல்லா, ஆப்கானிஸ்தான் உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் எதிர்கட்சியால் கடுமையாக விவாதிக்கப் பட்டதை அடுத்து பாராளுமன்றில் இருந்து அவசரமாக பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தனது ஆடை அலங்காரத்தின் விளைவால் அங்குள்ள ஊழியரால் வெளியேற்றப் பட்டார்.

15வருடம் அரசியல் அதிகாரத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவிற்கு தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.